ஆதார் புதுப்பித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகுதா? கட்டாயம் இதை செய்ய வேண்டும்!
10 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு மூன்று மாதம் இலவசமாக ஆதார் புதுப்பிக்க அனுமதி.
By : Bharathi Latha
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என்று ஏற்கனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது. தற்போது அரசின் டேட் ஆப் பெசில் இருக்கும் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியத்தை வலியுறுத்துகிறது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதாரம் ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
இந்நிலையில் ஆதார் அட்டை விவரங்களை இணையதளம் மூலமாக மக்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறது. அதாவது மார்ச் 15 2023 முதல் ஜூன், 2023 14ஆம் தேதி வரை இந்த இலவச சேவை கிடைக்கும் என்றும் மை ஆதார் எனும் தளத்தில் இலவசமாக இந்த குறிப்பு பணியை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்து இருக்கிறது. ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் அதற்கு 50 ரூபாய் கட்ட மனமாக கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்களின் உதவியுடன் மக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து தங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சுமார் 12 00க்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதார் அட்டை அறிமுகமானது. இந்தியாவில் உள்ள கோடான கோடி மக்கள் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அத்தகைய நம்பகமான சான்றிதழ்களை கட்டாயம் புதுப்பித்துக் கொண்டு பயன்பெற வேண்டும்.
Input & Image courtesy: Hindu News