அட சூப்பர் நியூஸ்.. அபுதாபியில் முதல் இந்து கோவில்.. பிரமிப்படையும் வெளிநாட்டினர்..
அபுதாபியில் நிறுவப்பட உள்ள முதல் இந்து கோவிலின் கட்டுமானத்தை பார்த்து வெளிநாட்டு தூதர்கள் பிரமிப்பு.
By : Bharathi Latha
அபுதாபியில் நிறுவப்படவுள்ள முதல் ஹிந்து கோயிலின் கட்டுமானப் பணிகளை, 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பிரமிப்படைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வெளிநாட்டு உறவுகளுடன் நல்ல நிலையில் இந்தியா இருந்து வருகிறது. மேலும் வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அங்கு கோவில்கள் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அபுதாபியில் முதல் முதலாக இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், சுவாமி நாராயணன் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 55,000 சதுர அடி பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கச்சிதமாக நடைபெற்று வரும் இந்த கோவில் கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட, சுவாமி நாராயணன் கோயில் நிர்வாகம் மற்றும் இந்திய துாதரகம் சார்பில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இக்கோயிலுக்கு வருகை தந்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார்கள். குறிப்பாக கலை நாயத்துடன் கட்டப்பட்டு வரும் சிற்ப வேலைபாடுகள் போன்றவை அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Input & Image courtesy: Mediyaan News