Kathir News
Begin typing your search above and press return to search.

இப்படி ஒரு கொடூரனின் கருணை மனுவை ஏற்பதா? - அதிரடி காட்டிய ஜனாதிபதி!

நான்கு வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற கொடூரனின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

இப்படி ஒரு கொடூரனின் கருணை மனுவை ஏற்பதா? - அதிரடி காட்டிய ஜனாதிபதி!

KarthigaBy : Karthiga

  |  5 May 2023 10:30 AM GMT

மராட்டி மாநிலத்தைச் சேர்ந்தவர் வசந்த சம்பத் துபாரே . இவர் கடந்த 2008 - ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு நான்கு வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி தனது வீட்டுக்கி அழைத்துச் சென்று கற்பழித்தார். பின்னர் கற்களால் அந்த சிறுமியை தாக்கி கொடூரமாக கொலை செய்தார் .இந்த வழக்கில் துபாரேவுக்கு விசாரணை கோர்ட்டிலும், மும்பை - ஹை கோர்ட்டிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது . அதை சுப்ரீம் கோர்ட் கடந்த 2014 - ஆம் ஆண்டு உறுதி செய்தது.


இது தொடர்பான மறு ஆய்வு மனூவையும் கடந்த 2017 - ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை அடுத்து குற்றவாளி சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது .அது ஜனாதிபதி திரவுபதி முர்முவால் நிராகரிக்கப்பட்டது. அது கடந்த மாதம் - 28ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதனால் கற்பழிப்பு கொலை குற்றவாளி துபாரேவுக்கு தூக்கு உறுதியாகியுள்ளது . ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஜூலை 25- ஆம் தேதி பதவி ஏற்ற பிறகு நிராகரித்த முதல் கருணை மனு இதுவாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News