கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் மத்திய அரசு செய்த சாதனை!
உணவு பதப்படுத்துதல் துறை 9 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

By : Karthiga
டெல்லியில் உலக உணவு இந்தியா என்ற மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அதில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் அடங்குவர் என்று காட்டுவதும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதும் இதன் நோக்கமாகும். தலைமை செயல் அதிகாரிகளின் வட்டமேசை மாநாடுகளும் நடக்கின்றன. அங்கு முதலீடுகளை ஈர்ப்பது பற்றியும் வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலை பற்றியும் விவாதிக்கப்படுகிறது .
இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் வலிமையை பறைசாற்றும் விஷயங்களும் அமைக்கப்பட்டன. உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஒரு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு விதை மூலதன உதவி வழங்கினார்.உணவு தெருக்களை திறந்து வைத்தார். பிரதமர் மோடி பேசியதாவது :-
இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை எழுச்சி பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் அத்துறையில் ரூபாய் 50,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில்துறை ஆதரவு கொள்கைகளாலும் விவசாயிகள் ஆதரவு கொள்கைகளாலும் தான் இது சாத்தியமானது. கடந்த 9 ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி 150 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு பதப்படுத்தும் திறன் கணிசமாக உயர்ந்துள்ளது .இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI
