Kathir News
Begin typing your search above and press return to search.

போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. மத்திய உள்துறை அமைச்சகம்..

போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. மத்திய உள்துறை அமைச்சகம்..

போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. மத்திய உள்துறை அமைச்சகம்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 1:21 PM GMT

போலிச்செய்திகள் உருவாக்கிய பதட்டத்தால் இடம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அளவில் இடம்பெயர நேர்ந்ததை, உச்சநீதிமன்றம் தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழி வகுத்துள்ளன என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தெரிவித்தது.

நீதிமன்றத்தின் இந்த அறிவுத்தலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.அஜய்குமார் பல்லா போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிவாரண முகாம்களில் இருக்கின்ற குடிபெயர் தொழிலாளர்களுக்கு தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் (NDMA) / மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆகியவை அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படியும், இதர நலவாழ்வு நடவடிக்கைகளின்படியும் உணவு, மருந்துகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு வழங்கியுள்ள அறிவிப்புகள், ஆலோசனைக் குறிப்புகள் மற்றும் ஆணைகளை கடைபிடிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News