தகவல் அறியும் உரிமைச் சட்ட விவாகரத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் அதிரடி தீர்ப்பு.!
தகவல் அறியும் உரிமைச் சட்ட விவாகரத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் அதிரடி தீர்ப்பு.!
By : Kathir Webdesk
RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டதில் தலைமை நீதிபதியும் அடங்கவேண்டும்அவருக்கு விதிவிலக்கு அளிக்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு எஸ்.சி.அகர்வால் அவர்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தலைமை நீதிபதியும் அடங்குவார் என தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
இவ்வழக்கானது உச்சநீதிமன்றம் சென்றது கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது. இன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பல அதிரடி தீர்ப்புகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.வழக்கு தொடர்ந்த எஸ்.சி.அகர்வால் அவர்களின் தரப்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,வாதாடினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஓய். சந்திராசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கன்னா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது!