Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயின் லியோ படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களுக்கு அதிரடி நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களுக்கு தடை விதித்து ஹை கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.

விஜயின் லியோ படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களுக்கு அதிரடி நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு
X

KarthigaBy : Karthiga

  |  19 Oct 2023 11:15 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா நடித்திருக்கும் லியோ படம் வெளியானது. இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கும் விதமாக அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்டில் லியோ பபடத்தின் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் இயக்குனர் லலித் குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார்.


இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி லியோ படம் நாடும் முழுவதும் 1500 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார் .


இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி , "மனுதாரர் பட்டியலிட்டுள்ள 1246 இணையதளங்களில் லியோ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கிறேன் . இந்த இணையதளங்களில் லியோ படம் வெளியாவதை தடுக்க பி.எஸ்.என்.எல் உள்ளிண் இணையதள சேவை நிறுவனங்கள்., தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News