Kathir News
Begin typing your search above and press return to search.

சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.

சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  4 Aug 2023 11:15 AM GMT

சீனாவில் இருந்து மடிக்கணினி, கையடக்க கணினி மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் இருக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பொருட்களின் இறக்குமதிக்கும் மத்திய அரசு இன்று கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் இது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதில் மடிகணினி, கையடக்க கணினி பர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மைக்ரோ கம்ப்யூட்டர்கள் பெரிய மற்றும் மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர்கள், டேட் ஆப் ப்ராசஸிங் எந்திரங்கள் ஆகியவற்றிற்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இனிமேல் இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசிடம் உரிமமோ அல்லது அனுமதியோ பெற வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது.


அதே சமயத்தில் ஒரு சரக்குக்கு 20 பொருட்கள் வரை இறக்குமதி செய்ய உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பேக்கேஜ் விதிகளின் கீழ் செய்யப்படும் இறக்குமதிக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. அதுபோல் ஆன்லைன் வணிக இணையதளங்கள் மூலம் வாங்கப்படும் ஒரு மடிக்கணினி ஒரு கையடக்க கணினி உள்ளிட்ட பொருள்களுக்கு இறக்குமதி உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இறக்குமதிக்கு வழக்கம் போல் வரிகள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News