Kathir News
Begin typing your search above and press return to search.

கோதுமை விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்க மத்திய அரசு செய்த அதிரடி நடவடிக்கை

கோதுமை மாவு விலை உயர்விலிருந்து இருந்து நிவாரணம் அளிக்க மத்திய அரசு கோதுமை மாவை ஏழைகளுக்காக 27 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

கோதுமை விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்க மத்திய அரசு செய்த அதிரடி நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  7 Nov 2023 4:15 AM GMT

நாடு முழுவதும் கோதுமை மாவு விலை அதிகரித்துள்ளது. தரம் மற்றும் ஊருக்கு ஏற்ப கிலோ 36 முதல் 70 வரை விற்கப்படுகிறது அதனால் கடந்த பிப்ரவரி மாதம் பொது மக்களுக்கு சோதனை முறையில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. பாரத் ஆட்டோ என்ற பெயரில் கிலோ ரூபாய் 29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18000 டன் கோதுமை மாவு விற்பனை செய்தது.


இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பாரத் ஆட்டா கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மானிய விலையில் கிலோ 27.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளான நபெட் என்.சி.சி எஃப் கேந்திரிய பண்டார் ஆகியவற்றின் 2000 கடைகள் மற்றும் இன்னொரு நடமாடும் பேன்கள் மூலம் பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்கப்படும். டெல்லியில் கடமை பாதையில் நடந்த நிகழ்ச்சியில் பாரத் ஆட்டாவால் ஏற்பாட்டால் 100 நடமாடும் வேன்களை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு மாவு பாக்கெட்டை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


நாங்கள் சோதனை முறையில் செய்த விற்பனை வெற்றி பெற்றதால் முறைப்படி விற்பனையை தொடங்கியுள்ளோம். அப்போது குறைவான மாவு விற்கப்பட்டது. தற்போது 800 ஆண்கள் 2000 கடைகள் மூலம் நாடு முழுவதும் அதிகளவில் விற்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து ரூபாய் 21.50 என்ற விலையில் 3 கூட்டுறவு அமைப்புகளுக்கும் மொத்தம் 2.5 லட்சம் டன் கோதுமை விற்கப்படும். அவற்றை மாவாக மாற்றி கூட்டுறவு அமைப்புகள் விற்பனை செய்யும். இதனால் கோதுமை மாவு புழக்கம் அதிகரித்து, அதன் விலை குறையும். தீபாவளியை முன்னிட்டு பொது மக்களுக்கு விலை உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News