Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவிலிருந்து கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை மீட்க நடவடிக்கை !

மயிலாடுதுறை அருகே உள்ள கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை அமெரிக்காவிலிருந்து மிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் இரண்டு கூறினார்.

அமெரிக்காவிலிருந்து கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை மீட்க நடவடிக்கை !

KarthigaBy : Karthiga

  |  3 May 2023 7:51 AM GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத யோகீஸ்வரர் எனும் வீரட்டேஸ்வர் கோவில் உள்ளது. சிவபெருமானின் வீர திருவிளையாடல்கள் நடந்த அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு சொந்தமான வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை கடந்த 1770 - ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த அருங்காட்சியகத்தின் வலைத்தளம் மூலம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வீணாதாரா தட்சிணாமூர்த்தி உலோக சிலை அங்கு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்தோ- பிரென்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி என்ற அமைப்பால் இக்கோவிலில் 1958 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் உள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் ஒன்று என்று தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினர் நடத்திய விசாரணையல் வீணாதார தகட்சிணாணாமூர்த்தி சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது உறுதியானது .இந்த சிலை திருடப்பட்டது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை கொற்கை யோகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சிலை என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கலை பண்பாட்டுத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அந்த சிலையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News