Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்- தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்- தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!
X

KarthigaBy : Karthiga

  |  6 Feb 2024 4:30 AM GMT

தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் பதவியேற்றதிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது .பெயரளவில் செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது .தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது. ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் எவ்வகையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.சுவரொட்டி விநியோகித்தல் , துண்டு பிரசுரம் விநியோகித்தல் உட்பட எந்த பணியிலும் பயன்படுத்த கூடாது. பிரச்சாரத்தில் குழந்தைகளை கையில் தூக்கி வைத்திருக்க கூடாது . வாகனங்களிலோ பேரணிகளிலோ குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது .அது போல் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் தனிப்பட்ட பொறுப்பாகும்.


இந்த விதிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அரசியல் கட்சியால் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுத்தப்படாத ஒரு அரசியல் தலைவரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணையுடன் ஒரு குழந்தை வெறுமனே சந்திப்பதை விதிமீறலாக கருத முடியாது .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News