தைரியமாக அரசியலுக்கு வரலாம், நடிகர் விஜயை முதல்வராக்க திட்டமிடும் கூட்டம், கனவு பலிக்குமா ?
தைரியமாக அரசியலுக்கு வரலாம், நடிகர் விஜயை முதல்வராக்க திட்டமிடும் கூட்டம், கனவு பலிக்குமா ?
By : Kathir Webdesk
தமிழகத்தில் அணைத்து நடிகர்களும் அரசியலுக்கு வர துடிக்கின்றனர். அதுவும் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சில படங்கள் வெற்றியடைந்து, தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டால் போதும், அரசியலுக்கு அடித்தளம் இட ஆரம்பித்துவிடுவார். ரஜினி, கமல், விஜய் முதல் விஷால் வரை இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர்.
நடிகர் விஜய் பொறுத்த வரை அவருக்கென ரசிகர் கூட்டம் உள்ளது. அவரின் படங்களில் அரசியல் அதிரடி அதிகம் இடம்பெறுவது வழக்கம். அதே வேளையில் அரசியலால் அவரின் படங்களுக்கு சில பிரச்சனைகளும் எழுந்தது. அதே வேளையில் அவரை அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுகளும் எழுந்தபடியே உள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தாமாக நடிகர் விஜயை சந்தித்து அரசியலுக்கு தைரியமாக வரலாம். தாங்கள் எடுத்த ஆய்வில் கணிசமான மக்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.