சிறிது நாட்களுக்கு கை குலுக்குவதை தவிர்த்து, தமிழர் பண்பாடான வணக்கத்தை பயன்படுத்துவோம் - நடிகர் விவேக் வேண்டுகோள்!
சிறிது நாட்களுக்கு கை குலுக்குவதை தவிர்த்து, தமிழர் பண்பாடான வணக்கத்தை பயன்படுத்துவோம் - நடிகர் விவேக் வேண்டுகோள்!

திருவாரூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் விவேக் செய்தியாளர்களை சந்தித்தார். "கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சிறிது நாட்கள் மக்கள் கை குலுக்குவதை தவிர்த்து, கையெடுத்து கும்பிடும் தமிழர் பண்பாடான வணக்கத்தை பயன்படுத்துவோம்" என அப்போது வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸ் குறித்து அனைவருக்கும் அச்சம் நிலவுகிறது எனவும், மருத்துவர்கள் பாதுகாப்பான வழி முறையை ,வாழ்க்கை முறையை வைத்துக் கொண்டாலே கொரோனா வைரஸ் தவிர்க்கலாம் என்கிறார்கள், கொரோனா வைரஸ் என்பது காற்றால் பரவக்கூடிய நோய் அல்ல, கைகளின் மூலம் மிக எளிதில் பரவக்கூடிய இந்த நோயை தவிர்க்க நமது கையை அடிக்கடி சோப்பால் கழுவி வேண்டும் எனக் கூறினார்.
கைகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதால், கையுறைகள் போட்டு கொள்ளலாம் அல்லது சிறிது நாட்களுக்கு மக்கள் கை குலுக்குவதை தவிர்த்து தமிழர் பண்பாடான வணக்கத்தை பயன்படுத்துவோம் என ஊடகங்கள் வாயிலாக வெகுஜன மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.