சிலை வடிவில் மீண்டும் 'உயிர்ப்பிக்கப்பட்ட' நடிகை ஸ்ரீதேவி: சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சேர்ப்பு!!
சிலை வடிவில் மீண்டும் 'உயிர்ப்பிக்கப்பட்ட' நடிகை ஸ்ரீதேவி: சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சேர்ப்பு!!
By : Kathir Webdesk
உலக பிரபல நடிகர்கள், ஹிந்தி நட்சத்திரங்கள், உலக அளவில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதிகள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற பற்பல நட்சத்திரங்களின் மெழுகு பொம்மைகளைக் கொண்டிருக்கும் madame tussauds அரும்பொருட்காட்சியகத்தின் பட்டியலில் நேற்று நடிகை ஸ்ரீதேவியின் ஒரு மெழுகுப் பொம்மையும் சேர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான Mr.இந்தியா எனும் பாலிவுட் திரைப்படத்தின் “ஹவா ஹவாய்” பாடல் காட்சியில் நடிகை ஸ்ரீதேவி வந்த அதே தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பொம்மை வடிவமைக்கப்பட்டது.
காணும் மக்களுக்கு ஓர் எதார்த்தமான அனுபவத்தைத் தரும் நோக்கத்தில் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட் காட்சியகப் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூருக்கு வந்திருந்தோரிடையே திரட்டிய கருத்தின்படி இந்தியத் திரை உலகில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிரபலமாக இருப்பது தெரிய வந்தது. அவரின் நினைவாக இப்பொம்மை நேற்று சிங்கப்பூரில் வைக்கப்பட்டது.
சிலைக்கான திறப்பு விழா நேற்று செந்தோசாவில் உள்ள ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தில் இடம்பெற்றது.
தம்முடைய குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் கலந்து கொண்டு சிறப்பித்த போனி கபூர், மனைவி ஸ்ரீதேவி பற்றிய சுவாரசியமான தகவல்களை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக உயிருடன் இருக்கும் பிரபலங்களின் உருவங்களை மெழுகுப் பொம்மைகளாகப் படைத்து வரும் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகம், இந்த முறை காலமான ஸ்ரீதேவியின் உருவத்தைத் தயாரிப்பதில் சவால்களை எதிர்நோக்கியதாக அவர் கூறினார்.