Kathir News
Begin typing your search above and press return to search.

கடன் செயலிகள் மீது கூடுதல் கண்காணிப்பு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.

கடன் செயலிகள் மீது கூடுதல் கண்காணிப்பு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

KarthigaBy : Karthiga

  |  22 Feb 2024 12:50 PM GMT

அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிதி சார்ந்த கண்காணிப்பு அமைப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.. நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின் 28 வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பேசியதாவது:-


சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் இப்போதுள்ள பொருளாதார சூழலுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக்கூடாது நாட்டினஸ்திரத்தன்மையை பாதிக்கும் எந்த நிகழ்வும் முன்னதாக தடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நிதி சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும் .அதிகாரப்பூர்வமற்ற கடன் செயல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ,செபி ,ஐ.ஆர. டி. ஏ ,ஐ.பி. பி.ஐ, ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, சர்வதேச நிதி சேவை மையம், நிதி அமைச்சகம் ,பொருளாதார விவகாரத்துறை உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் நாட்டின் நிதி செயல்பாடுகள் சார்ந்த ஆலோசனை நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக வாடிக்கையாளர் விவவரப்படிவத்தை வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒரே மாதிரியாக தயாரிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் அதனை நிறுவனங்கள் தங்களுக்குள் பரிமாறி கொள்ள வசதியாக இருக்கும். நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News