Kathir News
Begin typing your search above and press return to search.

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூபாய் 100 மானியம் - மத்திய மந்திரி சபை முடிவு!

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூபாய் 100 மானியம் தருவதற்கு மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூபாய் 100 மானியம் - மத்திய மந்திரி சபை முடிவு!

KarthigaBy : Karthiga

  |  5 Oct 2023 5:00 AM GMT

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. காலியாகும் சிலிண்டருக்கு மாற்று சிலிண்டர் மற்றவர்களை விட ரூபாய் 200 குறைவாக அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் ரூபாய் 918 விலையில் சிலிண்டர் பெற்று வந்தனர். இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் சமையல் கியாஸ் இணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் மத்திய அரசு ரூபாய் 200 மானியம் அறிவித்தது.

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது. அதனால் பொதுமக்களுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ₹1,118 இல் இருந்து ரூபாய் 918 ஆக குறைந்தது . உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்காக சிலிண்டர் விலை ரூபாய் 918 இல் இருந்து 718 ஆக குறைந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது அதில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் ரூபாய் 100 மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டது . இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூபாய் 100 மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . அதாவது அவர்களுக்கான மானிய தொகை ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 300 ஆக உயர்த்தப்படுகிறது . இதனால் அவர்களுக்கு ரூபாய் 618 விலையில் சிலிண்டர் கிடைக்கும். பெண்களின் வாழ்க்கையில் உஜ்வாலா திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. கூடுதல் மானியம் வழங்கும் முடிவு அவர்களுக்கு பலன் அளிக்கும் . இவ்வாறு அவர் கூறினார்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News