Kathir News
Begin typing your search above and press return to search.

பிள்ளை வரம் அருளும் ஆதி வீரமாகாளியம்மன்

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில் இந்த கோவிலில் உள்ள மக்கள் பௌர்ணமி கோவில் என்றும் அழைப்பிதண்டு காரணம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும் இன்னொரு காரணமும் உண்டு அதைப் பற்றி காண்போம்.

பிள்ளை வரம் அருளும் ஆதி வீரமாகாளியம்மன்

KarthigaBy : Karthiga

  |  11 March 2023 1:30 AM GMT

ஆதி வீரமா காளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியூர் பகுதியில் இருந்துள்ளது. அந்த பகுதியில் குடியிருந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்ற பின்னர் அந்த பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது . அதில் ஒரு புற்று இருந்துள்ளது . இதனை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒருநாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல் பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது அந்த புற்றிலிருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை.


இதை அடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை ஒன்றரை அடி உயர கருங்கல் சிலையாகும். இந்த சிலை 1996 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது . கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது . இந்த கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தை கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது .விநாயகர் சன்னதியும் உள்ளது .


இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தை பேறு கிட்டும். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு மூன்று பௌர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும் . மூன்றாவது பௌர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும்போது ஆண் , பெண் உருவம் கொண்ட இரண்டு மரப்பாச்சி பொம்மைகள் எடுத்து வர வேண்டும்.


அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்துவிட்டு ஒரு பொம்மை கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது . அதன்படி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதேபோல் திருமணமாகாதவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகல்களில் இரண்டு பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டுவர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும் . அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும் இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக் கொண்டு வருபவர்களும் அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள் .


இந்த கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பௌர்ணமியில் நடைபெறும் பூஜைதான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது. தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பள்ளியூர் . இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கிழக்கு நோக்கி சென்றால் ஆலயத்தை அடையலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News