உத்தரபிரதேசத்தில் எங்கும் முருங்கை மயம்!! ஒரு கோடி முருங்கை கன்றுகள் கொடுத்து வளர்க்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத் !!
உத்தரபிரதேசத்தில் எங்கும் முருங்கை மயம்!! ஒரு கோடி முருங்கை கன்றுகள் கொடுத்து வளர்க்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத் !!

முருங்கை காய் மற்றும் அதன் கீரை குழந்தைகளுக்கான அதிக ஊட்டச்சத்தைஅளிக்கிறது. உ.பி.யில் ஊட்டச் சத்து குறைவான குழந்தைகள் அதிகம் இருப்பதாக அம்மாநில அரசின் மருத்துவ புள்ளிவிவரங் களில் பதிவாகி வருகின்றன. இதை ஈடுகட்டும் வகையில், முருங்கை மரத்தின் பலன் அதிக உதவியாக இருக்கும் என முதல்வர் யோகிக்கு சொல்லப் பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, அவர் தாம் செல்லும் அரசு விழாக்களில் முருங்கையின் பலனை தவறாமல் கூறி வருகிறார். அத்துடன், அவ் விழாவில் பொதுமக்களுக்கு முருங்கை மரக்கன்றுகளை இலவசமாக அளித்து வருகிறார். இவர் எம்.பி.யாக இருந்த தொகுதியான கோரக்பூரில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கோரக்பூரின் மாவட்ட ஆட்சியரும், தமிழருமான கே.விஜயேந்திர பாண்டியன் கூறும்போது, ‘முதல்வர் கலந்து கொள்ளும் மரம்நடும் விழாக்களில் முருங்கையையும் அளிப்பதுடன் அதன் பலன்களைத் தவறாமல் எடுத்துரைக்கிறார். இதை உயிர் காக்கும் ஒன்றாகக் கூறப்படும் கல்பவிருட்சம் என முதல்வர் கூறி வருகிறார்.
ஆப்பிரிக்காவில் அதிகப்பிரச் சனையாக ஊட்டச்சத்து குறைவு இருந்த போது அந்நாட்டினர் முருங்கைக் கீரைகளால் பல னடைந்ததாகவும் அவர் கூறுவதால் உ.பி.யில் முருங்கை மரம் முக்கியமானதாகி வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இந்த வருடம் ஒரு கோடி மரங்களை கோரக்பூரில் நட முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். இதில் முருங்கை மரங்கள் அதிகமாக இருக்கவும் ஆட்சியர் விஜயேந்திரபாண்டியனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அதிக எண்ணிக்கையில் முருங்கை மரக்கன்றுகளை சேர்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ள னர். மேலும், மூலிகைச் செடி களுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் யோகி, அவற்றை நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள ‘மீடியன்’களில் நடவும் உத்தரவிட்டுள்ளார்.