Kathir News
Begin typing your search above and press return to search.

சந்திரயான் வெற்றியை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்ய 'ஆதித்யா- எல் 1'

சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்-1' விண்கலம் வருகிற இரண்டாம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

சந்திரயான் வெற்றியை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்ய ஆதித்யா- எல் 1

KarthigaBy : Karthiga

  |  28 Aug 2023 4:00 AM GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்றாவது நிலவு பயணமான சந்திரன் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 'ஆதித்யா எல் 1' சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையில் என இந்திய பணியாகும். ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் மற்றும் பூமியின் மையப்பகுதியான 'லெக்ரேஞ்சியன்' பாயிண்ட்-1 ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால் இஸ்ரோ இந்த திட்டத்திற்கு ஆதித்யா எல்-1 என்று பெயரிட்டுள்ளது.


'ஆதித்யா - எல்1 'லெக்ஞ்சியன்'புள்ளி 1 இல் இருந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரிய பூமி அமைப்பின் 'லாக்ரேஞ்ச்' புள்ளி 1-ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட பாதையில் விண்கலம் நிறுத்தப்படுகிறது. எல்-1 புள்ளியை சுற்றியுள்ள ஒளிவட்ட பாதையில் செயற்கைக்கோள் சூரியனை எந்த மறைவு கிரகணமும் இல்லாமல் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் பல ஆய்வுகளை செய்ய உள்ளது.


இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை உண்மையான நேரத்தில் கவனிப்பதில் அதிக பலன்கள் கிடைக்கிறது . இந்த விண்கலம் ஏழு கருவிகளுடன் பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிறது இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.


இவற்றில் பல சவால்களும் உள்ளன. குறிப்பாக பூமியில் இருந்து சூரியனின் தூரம் அதிகம். இந்த பெரிய துரம் ஒரு அறிவியல் சவாலாகும். இதில் உள்ள அபாயங்கள் காரணமாக முந்தைய இஸ்ரோ பணிகளில் கருவிகள் பெரும்பாலும் விண்வெளியில் நிலையாகவே இருந்தன. இருந்தாலும் ஆதித்யா எல்-1 நகரும்போது மோதலின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது . சூரிய வளி மண்டலத்தில் அதிக வெப்பமான வெப்பநிலை மற்றும் கதிர்வீச்சு சிக்கலும் உள்ளது. இருப்பினும் 'ஆதித்யா எல்-1 ' வெகு தொலைவில் இருந்து ஆய்வு பணியை திறம்பட செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News