Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு பம்மிய ஜாக்டோ ஜியோ - ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்து பின்வாங்கியது

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நிர்வாகிகள் சந்திப்பு.ஜாக்டோ-ஜியோ 5-ஆம் தேதி ஆர்ப்பாடம் ஒத்திவைப்பு.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு பம்மிய ஜாக்டோ ஜியோ - ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்து பின்வாங்கியது

KarthigaBy : Karthiga

  |  2 Aug 2022 5:45 AM GMT

முதல்வர் மு.க ஸ்டாலினை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள். 5-ஆம் தேதி நடத்த இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 16 பேர் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முயற்சியினால் நேற்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ்,அன்பரசு,கு.தியாகராஜன், ஆகியோர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரிடம் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், பணியாளர்கள் தொடர்பான கோரிக்கை மனு அளித்தனர். இந்த மாத இறுதியில் ஜாக்டோ-ஜியோ நடத்த உள்ள மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு வழங்க வேண்டும் என்று கோரினர். இதை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 1-1 -2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணியாளர்களின் மீதான தனது நல்லெண்ணத்தை வெளிகாட்டும் வகையில் இன்றைய சந்திப்பு அமைந்தது. இதற்கு முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற ஐந்தாம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.மேலும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்- பணியாளர் அமைப்புகள் கோரிக்கை தொடர்பாக நடத்த திட்டமிட்டுள்ள அனைத்து இயக்க நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது .

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News