Kathir News
Begin typing your search above and press return to search.

புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி 8,195 இடங்கள் அதிகரிப்பு

நாட்டில் இந்த ஆண்டு புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை மருத்துவ படிப்பில் 8,195 இடங்கள் அதிகரித்துள்ளன.

புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி 8,195 இடங்கள் அதிகரிப்பு

KarthigaBy : Karthiga

  |  10 Jun 2023 12:15 PM GMT

நாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் , ஒடிசாவில் இடம் மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 30 அரசு மருத்துவக் கல்லூரிகள் 20 தனியார் மருத்துவ கல்லூரிகள் இதனால் இளநிலை மருத்துவ படிப்பில் 8195 இடங்கள் அதிகரித்து மொத்த இடங்களை எண்ணிக்கை 1,7,658 ஆக உயர்ந்துள்ளது.


அரசு தகவல் படி நாட்டில் கடந்த 2014 - ஆம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. நாட்டில் டாக்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரிகளையும் அவற்றின் மூலம் மருத்துவ படிப்பு இடங்களில் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவீன் பவார் கடந்த பிப்ரவரியில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.


2014 - ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 654-ஆக உயர்ந்துள்ளது. இது 69 சதவீதம் அதிகரிப்பு. அதேபோல் இளநிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதமும் முதல் நிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 107 சதவீதமும் கூடியுள்ளன என பாரதி பிரவீன் பவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News