ஆட்சி அதிகாரத்தில் சம உரிமை கேட்கும் ஆப்கான் பெண்கள் !
அங்கு பழமைவாதம் தலைதூக்கும் என மக்கள் அஞ்சி அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
By : TamilVani B
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக பாதுகாப்பில் இருந்த அமெரிக்க நோட்டா படைகளை அமெரிக்க திரும்ப பெற்றப்பட்டதால் அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றி பெற்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானை தாலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. தற்போது மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் அங்கு பழமைவாதம் தலைதூக்கும் என மக்கள் அஞ்சி அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த முறை இருந்தது போன்ற கட்டுபாடுகள் ஏதும் இருக்காது எனவும் பெண்கள் படிக்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவர் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கபடாது எனவும் தாலிபான்கள் கூறியிருந்தனர் ஆனால் அவர்கள் கூறியதற்கு மாறாக நடந்து கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிகளையும், பெண்களையும் கட்டாயபடுத்தி திருமணம் செய்துகொள்வதாகவும் அவர்கள் மீது குற்றசாட்டு எழுந்தது.
இதற்கிடையில் அங்கு அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என தாலிபான்கள் மறுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலில் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் தாலிபான்களுக்கு எதிராகவும் பழமைவாததிற்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தாலிபான்களின் பழமைவாத குணம் மாறாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.