ஆப்கன் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை தீவிர ஆலோசனை !
ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
By : G Pradeep
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள பிரச்னை குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தற்போது ஆப்கன் நிலவரம் குறித்தும், தீவிர ஆலோசனை நடந்தது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதையடுத்து அவசர கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.