ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானங்களை பிடித்த தாலிபான்கள்! அதிர்ச்சியடைந்த வீரர்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது அங்குள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களிடம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது அங்குள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களிடம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுக்கும் தாலிபான் படைகளுக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் அரசுப் படையினரை வீழ்த்தி ஆப்கானிஸ்தானில் நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.
இது பற்றி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன் கவலையை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் அன்புக்குரிய உலகத் தலைவர்களே! எனது நாடு பெரும் சிக்கலில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.
எங்களின் உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல்வேறு குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளது. எனவே எங்களை குழப்பத்தில் விடாதீர்கள். ஆப்கன் நாட்டு மக்கள் கொல்வதையும், நாட்டை அழிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், காந்தஹாக் சர்வதேச கிரிக்கெட் மைதானம், குண்டுஸ் கிரிக்கெட் மைதானம், கோஸ்ட் சிட்டி கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விரைவில் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தாலிபான்களை ஒடுக்க வேண்டும் எனவும் பல்வேறு நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/112880/Afghanistan-cricket-in-fix-biggest-of-the-stadiums-taken-over-by-Taliban