பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டோம்! புகைப்படம் வெளியிட்ட தாலிபான்கள்!
ஆப்கானிஸ்தான் நாட்டை பிடித்த தாலிபான் தீவிரவாதிகளால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாமல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வந்த நிலையில் தற்போது கைப்பற்றி விட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை பிடித்த தாலிபான் தீவிரவாதிகளால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாமல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வந்த நிலையில் தற்போது கைப்பற்றி விட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது. இதனால் நாட்டில் ஒவ்வொரு மாகாணங்களை கைப்பற்றி வந்த தாலிபான்கள் ஒரு சில வாரங்களிலேயே நாட்டையே பிடித்து விட்டனர். இதனால் அதிபர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர். இதனிடையே தாலிபான்கள் புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தாலிபான்களால் வடக்கே இந்துகுஷ் மதலைத் தொடருக்கு அருகாமையில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தேசிய கிளர்ச்சி படையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதற்கு ஆப்கன் கொரில்லா படைப்பிரிவு தலைவர் அஹமது ஷா மசூதியின் மகன் அஹமது மசூத் தலைவராக வழி நடத்தி வந்தார்.
இதனால் தாலிபான்களுக்கும், கொரில்லா படைப்பிரிவுக்கும் கடும் சண்டைகள் நடந்து வந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 34 மாகாணங்களும் தாலிபான்கள் வசம் வந்தது. பஞ்ச்ஷீர் பகுதியில் தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2838644