ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது ! தாலிபான்கள் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நீடித்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு சில மாதங்களாக அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதால், தாலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்தனர்.
By : Thangavelu
ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நீடித்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு சில மாதங்களாக அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதால், தாலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்தனர்.
அதன்படி நேற்று இறுதியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரத்தை கைப்பற்றினர். அதிபர் மாளிகையை கைப்பற்றும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Twitter
Image Courtesy: Twiter
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=698187