Kathir News
Begin typing your search above and press return to search.

காபூல் வெடிகுண்டு தாக்குதலில் தாலிபானுக்கும், ஐ.எஸ்.க்கும் தொடர்பு! இடைக்கால அதிபர் சலே தகவல் !

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது ஒரு நாடகம் என்று ஆப்கானிஸ்தான் இடைக்கால அதிபர் அம்ருல்லா சலே பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காபூல் வெடிகுண்டு தாக்குதலில் தாலிபானுக்கும், ஐ.எஸ்.க்கும் தொடர்பு! இடைக்கால அதிபர் சலே தகவல் !

ThangaveluBy : Thangavelu

  |  27 Aug 2021 1:27 PM GMT

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது ஒரு நாடகம் என்று ஆப்கானிஸ்தான் இடைக்கால அதிபர் அம்ருல்லா சலே பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இதனிடையே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பல ஆயிரம் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனிடையே நேற்று மாலை (வியாழக்கிழமை) காபூல் விமான நிலையம் வெளியே அடுத்தடுத்து இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர். இதில் அமெரிக்க படையை சேர்ந்தவர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிப்போட்ட விளையாட்டை தொடங்கியுள்ளதாக பல நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் தாலிபான்களா? ஐஎஸ்ஐஎஸ்கே தீவிரவாத அமைப்பா என்ற கேள்விக்கு மத்தியில் பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: எங்களது படையினர் தங்கியிருந்த இடத்திலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

எங்களின் குழுவினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் ஐஎஸ் அமைப்பால் ஆபத்து காத்திருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, வெளிநாடு தப்பிய நிலையில், தன்னை இடைக்கால அதிபராக அம்ருல்லா சலே அறிவித்துக் கொண்டார். இதனிடையே காபூல் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், தாலிபான்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தாலிபான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது போன்று ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்று தாலிபான்கள் கூறுவதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகளின் மூலமே தாலிபான் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதா அம்ருல்லா சலே கூறியுள்ளார்.

Source: Dinakaran

Image Courtesy: Hindustan Times

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=700926

Next Story
கதிர் தொகுப்பு
Trending News