400 தொகுதிகள் வெற்றியை நோக்கி பிரதமர் மோடி செல்வது நிச்சயம் -அமித்ஷா!
மூன்றாவது கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி 400 தொகுதிகள் வெற்றியை நோக்கி செல்வார் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By : Karthiga
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆந்திர மாநிலம் தர்மாவரத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாடாளுமன்றத்திற்கு இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இரண்டு கட்டு தேர்தல்களிலும் பிரதமர் மோடி முன்னணியில் இருக்கிறார் .100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி விட்டார். மூன்றாவது கட்ட தேர்தலுக்கு பிறகு அவர் 400 தொகுதிகள் வெற்றியை நோக்கி செல்வார் .ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியை மூன்றாவது தடவையாக பிரதமராக்க முடிவு செய்துவிட்டது. ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்களில் ராகுல் காந்தி உட்பட யாரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல .
காங்கிரஸ் கட்சி அயோத்தி பிரச்சனையை 70 ஆண்டுகளாக இழுத்து அடித்தது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆங்கில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது .ஆனால் அவர்கள் வரவில்லை. அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவீர்களா? போலாவரம் திட்டம் ஆந்திராவுக்கான உயிர் மூச்சு திட்டம். அதை ஊழல் காரணமாக ஜெகன்மோகன் சீர்குலைத்துவிட்டார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவையும் மத்தியில் மோடியையும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் இரண்டு ஆண்டுகளுக்குள் போலாவரம் திட்டம் செயல்படுத்தப்படும்.அமராவதி மீண்டும் தலைநகர் ஆக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI