35 வயதுக்கு மேல் இடமில்லை என்று 41 வயதான இளைஞர் தலைமையில் தீர்மானம்
35 வயதுக்கு மேல் இடமில்லை என்று 41 வயதான இளைஞர் தலைமையில் தீர்மானம்
By : Kathir Webdesk
தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆடம்பரமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ஜோயல், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி, ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், 15 முதல் 30 வயது உள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று 41 வயதான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உள்ள இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க தலைவர்களுக்கான கட்சி தான், தொண்டர்களுக்கான கட்சி இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது என்று அரசியல் நிபுனர்கள் கருதுகின்றனர்.