Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை - மத்திய அரசின் சாதனை முயற்சி!

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை - மத்திய அரசின் சாதனை முயற்சி!

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை - மத்திய அரசின் சாதனை முயற்சி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Oct 2019 6:14 PM IST


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.





Loading...




அந்த வகையில் ராபி பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 7 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதில் உள்ள முக்கிய பயிர்களுக்கும் விலை நிர்ணய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோதுமை விலை 4.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டாலுக்கு 1925 ரூபாய் வரை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.


மசூர் பருப்பு வகைகளுக்கு அதிகபட்சமாக 7.26 சதவிகிதம் அளவுக்கு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. குவிண்டாலுக்கு 4600 ரூபாய் வரை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.


விவசாய பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஆண்டுகளில் அதிக விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் இந்த விலை நிர்ணயம் செய்கிறது.


அதிக உற்பத்தி மற்றும் உபரி காரணமாக சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவானால், அரசு முகமைகள் அனைத்து பண்டகங்களையும் விவசாயிகளிடமிருந்து அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்துகொள்ளும்.


பல்வேறு வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது உணவு தானயங்கள், எண்ணெய்வித்துக்கள், நார்சத்து பயிர்கள், கரும்பு மற்றும் புகையிலை போன்ற பயிர்களுக்கு விதைப்புக் காலம் தொடங்கும் முன்பே மத்திய அரசு விலையை அறிவிக்கிறது.


இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகளுடன் இணைந்து கொள்முதல் செய்யப்படும் இதற்கான பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விவசாயிகளின் நலன்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் அவர்களது வருவாயைக் காக்கும் விதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பணவீக்கம் மற்றும் பணவாட்டம் போன்றவை கட்டுக்குள் இருக்கும்.




https://twitter.com/MyNation/status/1181177904362704898

Next Story
கதிர் தொகுப்பு
Trending News