Kathir News
Begin typing your search above and press return to search.

#9PM9Minute தீபங்கள் ஏற்றி வழிபட்ட அஹோபில மடம் மற்றும் உத்தராதி மடம்..

#9PM9Minute தீபங்கள் ஏற்றி வழிபட்ட அஹோபில மடம் மற்றும் உத்தராதி மடம்..

#9PM9Minute தீபங்கள் ஏற்றி வழிபட்ட அஹோபில மடம் மற்றும் உத்தராதி மடம்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 3:00 AM GMT

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர். அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ஆன்மீக குருமார்கள், குடிசை வாழ் மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தீபம், மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டி, கொரோனாவை ஒழிக்க தன்னம்பிக்கையோடு ஒன்றுபட்டனர்.

தமிழகத்தில் தருமபுரம் ஆதனம் ஸ்ரீலஸ்ரீ சந்நிதானங்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைவர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தீபங்கள் ஏற்றினர்.

அந்த வகையில், ஆன்மீக ஸ்தலங்கள் பலவற்றிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஸ்ரீ மத்வாச்சார்யரின் குரு பரம்பரையில் துவைத்த சித்தாந்தத்தை பின்பற்றும் ஸ்ரீ உத்தராதி மடத்தில் நேற்று இரவு 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தீபங்கள் ஏற்றப்பட்டன. ஸ்ரீ உத்தராதி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகள் விளக்குகள் ஏற்றி, சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.


ஞானம், பத்தி, வைராக்கியத்தின் மூலம் கொரோனா நோயிலிருந்து உலக மக்கள் விலகி, அனைவரும் நலமுடன் வாழ, ஸ்ரீ மூல ராமரை, ஸ்ரீ பிரசன்ன விட்டலரை, ஸ்ரீ முக்கிய ப்ராணரை, ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை வேண்டிக்கொள்வதாக ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகள் ப்ரார்த்தனை செய்தார்.

அதே போல, ஸ்ரீ ராமானுஜரின் குரு பரம்பரையில் விசிஷ்ட அத்வைதத்தை பின்பற்றி வரும் அஹோபில மடத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஸ்ரீ அஹோபில மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ அழகிய சிங்கர் அவர்கள் தங்கள் சிஷ்யர்களுடன் நேற்று இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றினார்.

முன்னதாக தருமபுரம் ஆதீன மடத்தில் நேற்று இரவு 9 மணிக்கு சிவலிங்கம் வடிவில் தீபங்கள் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News