Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி- உலக அளவில் முதல் முறை என்ற பெருமையை பெற்ற இந்தியா!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. உலக அளவில் முதல் முறையாக நான்கு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனை வெளிப்படுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது.

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி- உலக அளவில் முதல் முறை என்ற பெருமையை பெற்ற இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  18 Dec 2023 5:45 AM GMT

வானில் 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வடிவமைத்த தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு ஒரே நேரத்தில் நான்கு இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது. இது டி.ஆர்.டி.ஓ வால் தொடர்ந்து மேம்படுத்தபட்டும் வருகிறது. இந்த ஏவுகணை அமைப்பு நேற்று விமானப்படை அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது.


அப்போது வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நான்கு ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இது ஒரே ஏவுதல் அலகில் இருந்து செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும். இதன் மூலம் ஒரே ஏவுதல் அலகில் இருந்து நான்கு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


இது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ தனது எக்ஸ் தளத்தில் "ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒற்றை ஏவுதல் அலகு மூலம் ஒரே நேரத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு வானிலக்குகளை தாக்கி அழிக்கும் திறனை வெளிப்படுத்திய முதல் நாடு இந்தியா" என்று குறிப்பிட்டிருந்தது.


25 கிலோமீட்டர் வரை சென்றூ தாக்கும் திறன் பெற்ற குறுகிய தூர ஏவுகணை அமைப்பான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு வான் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதன்மையாக பயன்படுத்தப்படும். மேலும் இந்த ஏவுகணை அமைப்பை இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.டி.ஓ கூறியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News