சேலம் உருக்கு ஆலைக்கு அகில பாரத BMS தலைவர்கள் வருகை!!
சேலம் உருக்கு ஆலைக்கு அகில பாரத BMS தலைவர்கள் வருகை!!
By : Kathir Webdesk
அன்பார்ந்த சகோதரர்களே.. வணக்கம்.
சேலம் உருக்காலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அகில பாரத BMS தலைவர்கள் சேலம் உருக்காலைக்கு வருகை புரிந்தனர்.
BMS தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 04/9/2019 அன்று காலை 9.00 மணிக்கு மரியாதைக்குரிய சேலம் உருக்காலை Executive Director அவர்களை சந்தித்து பேசினார்கள்.
பின்னர் *சேலம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு எஸ் ஆர் பார்த்திபன் அவர்கள்* சேலம் உருக்காலை கெஸ்ட் ஹவுஸில் BMS தலைவர்களை சந்தித்து ஆலையை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை பற்றி விவாதித்தார்கள்.அதன் பிறகு காலை 10-15 மணிக்கு *சேலம் உருக்காலை அனைத்து சங்க நிர்வாகிகள்* BMS தலைவர்களை சந்தித்து பேசினார்கள். சுமார் 2-30 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது அனைத்து சங்க நிர்வாகிகளும் சேலம் உருக்காலையின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களையும் விரிவாக எடுத்து கூறி அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மதியம் ஒரு மணிக்கு *5A கேட்டில் நடைபெற்றுவரும் காத்திருப்பு போராட்டத்தில்* BMS தலைவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்கள்.ஆலையை தனியார் மயத்திலிருந்து காப்பாற்றி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வரும் உருக்காலை தொழிலாளர்களை மிகவும் பாராட்டி பேசியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இன்னும் கடுமையாக போராட்டங்களை நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். மத்திய அரசு முயன்று வரும் உருக்காலைகளின் தனியார்மய நடவடிக்கைகளை BMS சங்கம் நிச்சயமாக தடுத்து நிறுத்தும் என்று உறுதி அளித்தார்கள்
*சேலம் உருக்காலை மார்க்கெட்டிங் பிரிவை சேலம் உருக்காலைக்கே தனியாக வழங்க வேண்டுமென்று BMS சங்கம் வலியுறுத்திய கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிய மாண்புமிகு மத்திய உருக்குத்துறை அமைச்சர் அவர்களுக்கு BMS தலைவர்கள் மூலமாக பாராட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*
நன்றி.