Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து வகையான போக்குவரத்திற்கும் வந்துவிட்டது இந்தியாவின் முதல் ட்ரான்சிட் கார்டு - எஸ்.பி.ஐ அறிமுகம்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் RuPay தேசிய பொது மொபிலிட்டி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து வகையான போக்குவரத்திற்கும் வந்துவிட்டது இந்தியாவின் முதல் ட்ரான்சிட் கார்டு - எஸ்.பி.ஐ அறிமுகம்!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 11:45 AM GMT

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வியாழன் அன்று அதன் RuPay தேசிய பொது மொபிலிட்டி கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்புமிக்க கார்டு சாலை முதல் ரயில் வரை நீர்வழிகள் மற்றும் நாடு முழுவதும் பார்க்கிங் வரை அனைத்து வகையான போக்குவரத்துக்கும் பணம் செலுத்த உதவுகிறது.இந்த ஒரு RuPay தேசிய பொது மொபிலிட்டி கார்டை வைத்து அனைத்து வகையான போக்குவரத்து கட்டணங்களையும் செலுத்த முடியும்.


இத்தகைய கார்டு இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகளுக்கு அதிகளவில் பலன் தரும். ஏற்கனவே யூபிஐ சேவைகள் மூலம் நிதி பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை இந்தியா உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போக்குவரத்து சேவையை எளிமையாக்க RuPay தேசிய பொது மொபிலிட்டி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டை சில்லறை விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்தலாம்.


இந்தியாவின் முதல் Transit Card ரூபே மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (என்சிஎம்சி) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. நாட்டு மக்களின் பயண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. மேலும் இது ஒரு தேசம் ஒரே அட்டை என்ற தேசிய பார்வையுடன் இணைந்துள்ளதால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பயனளிக்கும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா கூறினார். மேலும் இந்த இந்தியாவின் முதல் மற்றும் ஸ்பெஷலான Transit Card மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2023 அறிமுகப்படுத்தப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News