Kathir News
Begin typing your search above and press return to search.

'இதுவரை மக்களுக்காக பாஜக செய்த வளர்ச்சிப் பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்' -மோடி!

2019 தேர்தல் வாக்குறுதிகளில் பாஜக பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுவரை மக்களுக்காக பாஜக செய்த வளர்ச்சிப் பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான் -மோடி!

KarthigaBy : Karthiga

  |  6 April 2024 7:49 AM GMT

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 22 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலின் போது 12 தொகுதிகளுக்கும் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலின் போது 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுரு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என ஒட்டுமொத்த உலகமும் இன்று ஆச்சரியப்படுகிறது. அவர்களுக்கு தெரியாது. நாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை நிறைவேற்ற நம்மால் முடியும் .கடந்த 10 ஆண்டுகளில் நாடு மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்னாள் இந்நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்ததால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து கொண்டே வந்தது.

அத்தகைய சூழலில் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது .கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி நிலை வந்தபோது இந்தியா அழிந்துவிடும் என்று உலகம் நினைக்கத் தொடங்கியது. ஆனால் இந்த நெருக்கடியில் இந்தியர்களாகிய நாம் நமது நாட்டை உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம். இதுவரை நாம் செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் வெறும் டிரைலர்கள் தான் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தற்போது எல்லாம் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிட சென்றால் முதலில் பசியை தூண்டும் சில உணவு வகைகளை கொடுப்பார்கள். மோடி இதுவரை கொடுத்தது எல்லாம் அத்தகைய பசியை தூண்டும் உணவை மட்டும் தான் .நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பாஜக கண்டிப்பாக சொல்வதை செய்யும் .

மற்ற கட்சிகளைப் போல பாஜக வெறும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில்லை. நாங்கள் உறுதி பத்திரம் வழங்கி வருகிறோம். 2019 உறுதி பத்திரத்தில் நாங்கள் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன .முத்தலாக் தடைச்சட்டம் நமது இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவுகிறது. முத்தலாக் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதை எனது இஸ்லாமிய தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் பாதுகாத்துள்ளார்.

2019 பிப்ரவரி 26 அன்று நான் இந்த சுரு நகருக்கு வந்தபோது அந்த நேரத்தில் நாடு பாலக்கோட்டில் வான்வழி தாக்குதலை நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு நாம் பாடம் கற்பித்தோம். அப்போது நான் பாரதமாதாவை தலைகுனியை விட மாட்டேன் என்று கூறியிருந்தேன் .நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் ,வான்வழி தாக்குதல் நடத்திய போது காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அதற்கு ஆதாரம் கேட்டனர் .ராணுவத்தை அவமதிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் அடையாளம் .இவ்வாறு மோடி தெரிவித்தார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News