Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடி துறைமுக பகுதியில் ஆறு வழிச்சாலைக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு - நிதின் கட்கரி கூறிய அசத்தல் தகவல்!

தூத்துக்குடி துறைமுக பகுதியில் ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுக பகுதியில் ஆறு வழிச்சாலைக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு - நிதின் கட்கரி கூறிய அசத்தல் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  27 March 2023 10:00 AM GMT

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது :-


புதிய தேசிய நெடுஞ்சாலை 138 இல் தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த 5.16 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்போது ரூபாய் 200 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் அவர் தெரிவித்துள்ளார் . மேலும் செய்தி நிறுவனத்திற்கு கட்காரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-


வருகிற 2024 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவில் நெடுஞ்சாலைகள் அமைந்திருக்கும். அதற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. அதில் நாடு முழுவதிலும் குறுக்கிலும் நெடுக்கிலும் நடக்கும் பசுமை விரிவு வழிச்சாலை பணிகளும் அடக்கம். இந்த ஆண்டில் ரூபாய் 16,000 கோடி செலவில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


அதற்கான நிதி ஒதுக்கீடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும். கைலாச மானசரோவர் நெடுஞ்சாலை திட்டப் பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த நெடுஞ்சாலை பணி முடிவடையும் போது கைலாச மானசரோவர் யாத்திரை செல்ல பக்தர்கள் கடுமையான மலை ஏற்றம் செய்ய வேண்டி இருக்காது. யாத்திரை காலமும் பல நாட்கள் குறையும். நாட்டின் மிகப்பெரிய உள் கட்டமைப்பு திட்டமான 'பாரத் மாலா பரி யோஜனா' வில் 580 மாவட்டங்களை இணைத்து சுமார் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .


பாரத் மாலா இரண்டாவது கட்டத் தொடக்கத்தில் சுமார் 5,000 கீ.மீ நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பாரத் மாலா இரண்டாவது கட்டத்திற்கு மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல் அளிக்கும் . அப்போது நாட்டில் நெடுஞ்சாலை பணிகள் மேலும் வேகம் பெறும் . இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News