Kathir News
Begin typing your search above and press return to search.

இன்ஸ்டாகிராமில் மூலம் கூடா நட்பு: போதை பொருளுக்கு ஈடாக பள்ளி மாணவியை கற்பழித்த கும்பல்.!

இன்ஸ்டாகிராமில் மூலம் கூடா நட்பு: போதை பொருளுக்கு ஈடாக பள்ளி மாணவியை கற்பழித்த கும்பல்.!

இன்ஸ்டாகிராமில் மூலம் கூடா நட்பு: போதை பொருளுக்கு ஈடாக பள்ளி மாணவியை கற்பழித்த கும்பல்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Feb 2021 12:16 AM IST

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மூலம் 14 வயது நிரம்பிய சிறுமி கூடாநட்பின் காரணமாக பல மாத காலங்களாக, போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார். அதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் அந்த சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு வந்துள்ளார். முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் கல்பகஞ்சேரி என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக 14 வயது சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வெறும் இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்த முஹம்மது அஃப்லா மற்றும் முஹம்மது ரபீக் என்ற இருவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் முக்கிய குற்றவாளிகள் தப்பித்து விட்டனர் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறார். வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில், பள்ளி வகுப்பில் அனைத்து ஆன்லைனில் நடைபெற்ற காரணத்தினால் இவருக்கும் இவருடைய வீட்டின் சார்பாக மொபைல் வாங்கித் தரப்பட்டது. இதன் மூலம் தான் இவர் இன்ஸ்டாகிராமில் மூலம் டீனேஜ் ஆண்களுடன் பல மாதங்களாக சாட் செய்து வந்துள்ளார். பிறகு அந்த நபர் அந்தப் பெண்ணினுடைய வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் வந்துள்ளார். இதனை இந்த பெண் தன்னுடைய தாயிடம் கூறவில்லை. சில நாட்களுக்குப் பிறகு இந்த கூட நட்பின் காரணமாக அந்த நபர் இந்த பெண்ணுக்கு போதை பொருளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சில மாதங்களாக போதைப் பொருளை பயன்படுத்தி அந்த பெண் அதற்கு அடிமையாகி விட்டார்.

இப்படி அடிமையாக்கி அந்த பெண்ணை தன்னுடைய சொந்த லாபத்திற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்தி உள்ளார். தன்னுடைய நண்பர்களையும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட அந்த பெண் இதை தன்னுடைய வீட்டில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அந்த பெண் வீட்டில் உள்ளவர்கள் சைல்ட்லைனில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு முதலில் கஞ்சா, பின்னர் ஹாஷிஷ் எண்ணெய் மற்றும் கோகோயின் வழங்கப்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அதிக ஊசி மருந்துகள் வழங்கப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. போதைப்பொருள் மாஃபியாவால் அடிமைப்படுத்தப்பட்ட இதுபோன்ற பல பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக இப்போது சைல்ட்லைன் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் காவல்துறையினர் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதாக சைல்டு லைன் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிக முயற்சிகளை எடுக்க வில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே மாவட்டத்தின் குழந்தைகள் நலக் குழுவிடம்(CWC) தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். காவல்துறையினர் அவ்வாறு செய்யத தவறிவிட்டனர் இறுதியில் CWC அதிகாரிகளின் அவர்களிடம் அவ்வாறு கேட்க வேண்டியிருந்தது.

CWC தலைவர் ஷாஜேஷ் பாஸ்கர் தனது கருத்துக்களை கூறுகையில், "இது ஒரு சாதாரண POCSO வழக்கு அல்ல. தீவிரமான மற்றும் உடனடி தலையீட்டைக் கோரும் தீவிர தீவிரத்தன்மை உடைய ஒரு வழக்கு. இதுபோன்ற ஒரு குற்றத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இதற்கு முன்பு ஒருபோதும் மலப்புரத்தில் இதுபோன்ற ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மோசடி இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை சிக்க வைக்கிறது, அவர்களை போதைக்கு அடிமையாக்குகிறது, பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறது" என்று திரு. பாஸ்கர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த வழக்கை உள்ளூர் ஊடகங்கள் கூட பெரிதளவில் தீவிரம் காட்டவில்லை. குறிப்பாக இது உ.பி யில் நடந்து இருந்தால், இதன் கதையை பெரிதாக இருக்கும். அனைத்து ஊடகங்களும் இதைப் பற்றியே கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கும்" என்று அவர் கூறினார். இதைப்போல மற்றொரு இன்ஸ்டாகிராம் மோசடி தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டது. அங்கு பொறியியல் மாணவர் முகமது மொய்தீன் தலைமையிலான கும்பல் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் நிர்வாண மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் அம்பலப்படுத்தி, அச்சுறுத்தி, பிளாக்மெயில் செய்து பெண்களிடம் இருந்து பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கின் மூலம் இப்ராஹிம் என்ற மாணவர் தன்னுடைய பெயரை 'சிவா இடியட்' என்று பதிவு செய்துகொண்டு,
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்துள்ளார் அந்த வழக்கும் இதேபோல் அரங்கேறியது.

ஆக மொத்தத்தில் இது போன்ற ஆண்கள் சமூகவலைதளங்களில் தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொண்டு, சுதந்திரமாக சுற்றுகிறார்கள்.
திறமையான ஆட்சி அமைவதன் மூலம் தான் இவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதுவரை அச்சுறுத்தல், கற்பழிப்பு மற்றும் இளம் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தல் தொடரும். மிக முக்கியமாக, எங்கள் போலீஸ் படைகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற POCSO வழக்குகளை கையாளும் போது மேலும் பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டின் சில பகுதிகள் அனைத்து வகையான தீங்கு விளைவிக்கும் செயல்களின் மையங்களாக வளர்ந்து வருகின்றன. மேலும் சட்ட அமலாக்கங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்களும் பள்ளிகொள்ளும் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் எவ்வாறு பாதுகாப்பான வழியில் கையாளவேண்டும் என்பதை கருத்தரங்கு வாயிலாக புரிய வைக்க வேண்டும். குறிப்பாக பதின் பருவத்தை சேர்ந்தவர்களை சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்ற விழிப்புணர்வு நடப்பதன் மூலமாக இதுபோன்ற செய்திகளை தடுக்க முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News