Kathir News
Begin typing your search above and press return to search.

பிரமிக்க வைத்த மோடி - மத்திய மந்திரி பூபேந்திரி யாதவ் சொன்ன சூப்பர் செய்தி!

கடந்த 9 ஆண்டுகளில் 1 1.25 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மதிய மந்திரி பூபேந்திர யாதவ் கூறினார்.

பிரமிக்க வைத்த மோடி - மத்திய மந்திரி பூபேந்திரி யாதவ் சொன்ன சூப்பர் செய்தி!

KarthigaBy : Karthiga

  |  23 Jun 2023 7:00 AM GMT

மோடி அரசு பதிவேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதயொட்டி கடந்த 9 ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திரன் டெல்லியில் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-


கடந்த 2014 - ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. ஒன்னேகால் கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன . தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளை பார்த்தால் 2014 - 2015 நிதிி ஆண்டில் வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை 15 கோடியே 84 லட்சமாக இருந்தது.


2021 - 2022 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 27 கோடியே 73 லட்சமாக உயர்ந்தது. அமைப்பின் சம்பள பட்டியல் படி கடந்த 2022- 2023 நிதி ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 38 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். 2021- 2022 நிதி ஆண்டில் ஒரு கோடியை 22 லட்சம் சததாரர்களும், 2020 - 2021 நிதி ஆண்டில் 77 லட்சத்து 8 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புதிதாக வேலை பெற்றவர்கள் ஆவர்.


கடந்த 2014- 2015 நிதி ஆண்டில் ஓய்வூதியரார்களின் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது. 2021- 2022 நிதி ஆண்டில் 72 லட்சம் ஆக உயர்ந்தது. ஒன்பது ஆண்டுகளில் 21 லட்சம் பேர் மட்டும் ஓய்வு பெற்ற நிலையில் புதிதாக வேலைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. சேவை, நல்ல நிர்வாகம் நல்வாழ்வு ஆகிய மூன்று அம்சங்களில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.


அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் இன்றி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகிறோம். மொத்த பணியாளர்களில் 10% பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். மீதி 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களின் தகவல்களை பதிவு செய்ய இ- ஷரம் இணையதளம் தொடங்கப்பட்டது. 400 வகையான பணிகளை செய்பவர்கள் அதில் பதிவு செய்யப்படுகிறார்கள். இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 231 ஆக உள்ளது. விரைவில் மேலும் 10,120 படுக்கைகள் உருவாக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News