Kathir News
Begin typing your search above and press return to search.

நடந்தால் இன்னிசை ஒலிகளை உருவாக்கும் அதிசய கடற்கரை மணல் - எங்கே உள்ளது அந்த அதிசய மணல்?

கடற்கரை மணலில் அமர்ந்து சுண்டல் சாப்பிட்டபடியே செல்போனில் பாடல் கேட்டிருக்கிறோம். ஆனால் கடற்கரை மணலே பாடினால் எப்படி இருக்கும்?

நடந்தால் இன்னிசை ஒலிகளை உருவாக்கும் அதிசய கடற்கரை மணல் - எங்கே உள்ளது அந்த அதிசய மணல்?

KarthigaBy : Karthiga

  |  5 Aug 2023 11:15 AM GMT

ஸ்காட்லாண்டின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஈக் தீவின் மணலில் இருந்து இன்னிசை ஒலிக்கும் அதிசயம் நடக்கிறது. ஆம் இந்த வெண் மணல்களின் மீது நடந்தாலோ தொட்டாலோ இன்னிசை ஒலிகள் உண்டாகின்றன. மெல்லிசையில் தொடங்கி பல ஸ்வரங்களில் இன்னிசை பொழிகிறது மணல். அம்மணலின் வடிவமைப்பில் உள்ள விசேஷமே இந்த அதிசயத்திற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள் .


பொதுவாக மணல்களில் இப்படி இசை பிறக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும். ஒன்று ஒவ்வொரு மணல் துகளும் உருண்டையாக 0.1 முதல் 0.5 மில்லி மீட்டர் வரை விட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.இரண்டு அந்த மணலில் குறிப்பிட அளவில் சிலிகா இருக்க வேண்டும். மூன்று மணலில் ஈரத்தன்மை இல்லாத இருக்க வேண்டும் .


இந்த மூன்று தகுதிகளும் அமையப்பெற்ற எல்லா மணலும் இசைப்பாடும் என்பதே விஞ்ஞானிகள் தரும் தகவல் இப்படிப்பட்ட மணல் காற்றால் அசையும் போதும் மனிதர்கள் அவற்றை கையாளும்போதும் அதிர்வுகள் உண்டாகி இசை ஒலி எழுகிறது. ஈக் கடற்கரை மட்டுமல்ல சில பாலைவனங்களிலும் வேறு சில கடற்கரைகளிலும் இப்படி பாடும் மணல் உள்ளனவாம்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News