இந்திய பொருளாதாரம் என்ன ரேஞ்சுக்கு போகுது தெரியுமா? 4,500 கோடி ரூபாய் முதலீட்டை சுளையாக இறக்கிய அமேசான் நிறுவனம்: பெருகும் அந்நிய முதலீடு.!
இந்திய பொருளாதாரம் என்ன ரேஞ்சுக்கு போகுது தெரியுமா? 4,500 கோடி ரூபாய் முதலீட்டை சுளையாக இறக்கிய அமேசான் நிறுவனம்: பெருகும் அந்நிய முதலீடு.!
By : Kathir Webdesk
அமெரிக்காவில் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது கிளை தொழில் நிறுவனங்களில் 4,500 கோடி (635 மில்லியன் டாலர் ) ரூபாயை சமீபத்தில் கூடுதலாக முதலீடு செய்துள்ளது.
அமேசான் இந்தியாவில் தனது விநியோக பலப்படுத்தியதுடன், ஹைதரபாத், சென்னை என அடுத்தடுத்து பல இடங்ளகில் சேமிப்பு கிடங்குகளையும் அமைத்துள்ளது. அமேசான் தளத்தில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் புதிய விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர்.
வீடியோ வெளியீடு, உணவு விற்பனை என பல துறைகளில் இந்தியாவில் அமேசான் கால் பதித்து வருகிறது. இந்திய சந்தையில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கூடுதலாக 4,500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அமேசான் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, முதலீடுகள் குவிவது இல்லை என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், சர்வதேச நிறுவனமான அமேசான் இந்தியாவின் பொருளாதார நிலையை உண்மையாக புரிந்துகொண்டு முதலீடு செய்யமுன்வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.