அமெரிக்காவில் அதிக அளவில் உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு !
அமெரிக்காவில் தற்பொழுது உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் ஒருநாள் பலி 1932 ஆக உயர்ந்தது.
By : Bharathi Latha
உலக அளவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அந்த வகையில் குழுவின் முதல் அலை போது அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாதிப்புகள் எண்ணிக்கை அங்கு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. ஆனால் தற்பொழுது உருமாறிய வைரஸ்கள் காரணமாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மட்டும் கொரோனாவால் 1932 பேர் பலியாகியுள்ளனர்.
உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிற கொரோனா பல்வேறு இடங்களில் உருமாறி தாக்குதலை நடத்துகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் ஊரடங்கால் கட்டுக்குள் வந்தது. அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. பின் இதன் காரணமாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அங்கு தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த காரணத்தினால் கட்டுக்குள் வந்துள்ளது.
இருந்தாலும் இந்நிலையில் தற்போது அங்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனாவால் 2 லட்சத்து 10 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1932 பேர் பலியாகினர். கடந்த 7 நாள் சராசரி பாதிப்பு 1.66 லட்சமாகவும் பலி 1 418 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது சராசரி பாதிப்பு பலி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image courtesy: BBC News