அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் இந்தியாவை நோக்கி விரைகிறது - சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியாவோடு கைகோர்க்கும் உலக நாடுகள்!
அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் இந்தியாவை நோக்கி விரைகிறது - சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியாவோடு கைகோர்க்கும் உலக நாடுகள்!

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், அந்தமான் & நிக்கோபார் தீவின் கரையோரத்தில் இந்திய கடற்படையுடன் போர் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நிமிட்ஸ் கப்பல் ஏற்கனவே இந்திய கடலில் நுழைந்துவிட்டது. மலாக்கா நீரிணை வழியாக இங்கு வந்து சேர்ந்துள்ளது.
மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையிலான குறுகிய நீளமான நீரிணை, முக்கியமான உலகளாவிய பகுதியாகும். இங்கிருந்து சீனா உட்பட ஆசியாவின் பிற பகுதிகளுக்கு கணிசமான கச்சா எண்ணெய் செல்கிறது.
ஜூன் மாத இறுதியில் ஜப்பானிய கடற்படைப் படைகளுடன் இந்தியா மேற்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் இந்தியா-அமெரிக்க பயிற்சி மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா-ஜப்பான் கடற்படைப் பயிற்சி "பாசெக்ஸ்" பயிற்சி என்று அழைக்கப்பட்டது.
இந்தியா-சீனா எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மாதம் இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்ட நிலையில், இதன் விளைவாக ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு நேரடியாக பொறுப்பேற்றுள்ளது" என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது போர் பயிற்சிக்காக இந்தியா வரும் நிமிட்ஸ் விமானம் தாங்கி, கப்பல் தென் சீனக் கடலில் இருந்து வருகிறது.
இதற்கிடையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலபார் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் சேர வாய்ப்புள்ளது.