Kathir News
Begin typing your search above and press return to search.

இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர்- அமித் ஷா பெருமிதம்

முன் எப்போதும் இல்லாத வெற்றியை பா.ஜனதாவுக்கு அளித்த குஜராத் மக்கள் இலவச வழங்கும் அரசியலை நிராகரித்துவிட்டதாக அமித் ஷா கூறியுள்ளார்.

இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர்- அமித் ஷா பெருமிதம்

KarthigaBy : Karthiga

  |  9 Dec 2022 9:30 AM GMT

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :-


குஜராத்தில் பா.ஜ.க வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்துள்ளது. அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ் குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் பா.ஜ.க முறியடித்தது. தற்போது பா.ஜ.க.வை மக்கள் ஆசிர்வதித்து அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்க செய்துள்ளனர். இந்த அமோக வெற்றியானது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பா.ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது. இலவசம், வெற்றி, வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர்.


மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பா.ஜனதாவுக்கு முன் எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றிக்காக பா. ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முதல் மந்திரி பூபேந்திர பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சி .ஆர். பட்டிடீல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


குஜராத்தில் கிடைத்த சரித்திர வெற்றி வளர்ச்சி,நல்லாட்சி ஆகியவை மீது பா ஜனதா கொண்டுள்ள உறுதிபாட்டுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த வெற்றிக்கான பெருமை பிரதமர் மோடியின் தலைமை, அவரது புகழ், நம்பகத்தன்மை ஆகியவற்றையே சாரும். ஜே.பி நட்டா,பூபேந்திர பட்டேல், சி.ஆர்.பட்டீல் ஆகியோரின் கடின உழைப்பால் பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News