Kathir News
Begin typing your search above and press return to search.

அசாத்தியமான நான்கு முக்கிய பணிகளை சாத்தியமாக்கி நிறைவேற்றிய மோடி அரசு

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் முடிக்கப்பட்டுள்ளதாக அமித்ஷாவால் புகழாரம் சூட்டப்பட்ட நான்கு முக்கிய பணிகள் வருமாறு

அசாத்தியமான நான்கு முக்கிய பணிகளை சாத்தியமாக்கி நிறைவேற்றிய மோடி அரசு

KarthigaBy : Karthiga

  |  1 Oct 2023 1:45 PM GMT

சந்திரன் 3 புதிய நாடாளுமன்றம் ஜி-20 மாநாடு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்று நான்கு முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமிர்தா புகழாரம் சூட்டினார். மதிய ஒருத்தனை மந்திரி அமைச்சர் குஜராத் மாநிலத்தில் தனது மக்களவைத் தொகுதியான காந்தி நகரில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். சில பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது :-


நாட்டின் நான்கு முக்கிய பணிகளை பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களில் முடித்தார் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அதில் சாதாரணமாக ஒரு பணியை முடிப்பதற்கு 50 ஆண்டுகளாகும். இந்த சாதனை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தியாவுக்கு உலகத்தில் அதற்குரிய இடத்தை பெற்று தருவதில் உறுதியாக இருப்பதை காட்டுகிறது . இஸ்ரோவுக்கு புத்துயிரும் அதன் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமும் அளித்து சந்திரயான் 3 விண்கல வெற்றியை பிரதமர் மோடி சாத்தியமாக்கினார். அதனால் நமது மூவர்ண கொடியை நிலவில் உலகம் கண்டிருக்கிறது. அவரது வழிகாட்டலில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு புனிதமான விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கப்பட்டிருக்கிறது.


அங்கு முதலாவதாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மகளிர் சக்திக்கு உரிய மரியாதையை மோடி அளித்திருக்கிறார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடி டெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒருமனதாக வெளியிட வைத்தார். வளர்ந்து வளரும் நாடுகள் என இரு தரப்புடன் இந்தியா இருக்கும் செய்தியை உலகத்துக்கு அனுப்பினார். நாட்டின் மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்து ஆனால் சமூகத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்குடன் விஸ்வகர்மா திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News