Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வினரின் பினாமி சொத்து விவரம் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க செயலி, இணையதளம் - அப்டேட்டாக இறங்கி அடிக்கும் அண்ணாமலை

தி.மு.க வினரின் பினாமி சொத்து குறித்து விவரம் தெரிவிக்க மக்களுக்காக புதிய செயலி இணையதளம் வெளியிடப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தி.மு.க வினரின் பினாமி சொத்து விவரம் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க செயலி, இணையதளம் - அப்டேட்டாக இறங்கி அடிக்கும் அண்ணாமலை

KarthigaBy : Karthiga

  |  21 Dec 2022 10:15 AM GMT

திருப்பூரில் பா.ஜனதா கட்சி நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் நமது எல்லைக்குள் வர முயற்சித்தார்கள். அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து விரட்டி அடித்தனர். இதையும் காங்கிரஸ் கட்சி கொச்சைப்படுத்தி ராணுவத்தை பற்றி பேசியுள்ளனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். அவர்கள் தோல்வியை சந்திப்பதால் அவர்கள் வார்த்தை மிகவும் அவதூறாக மாறி வருகிறது. ராகுல் காந்தி சென்றது நடை பயணம் இல்லை அது நடைபயிற்சி. ஓடினார். பயிற்சி செய்தார். 10 பேரை பார்த்தால் அதில் எட்டு பேர் பிரச்சனைக்குரியவர்களாக இருப்பவர்களை சந்தித்தார். இந்த நடைபயணத்தின் வெற்றி என்பது குஜராத்தில் அவர்கள் தோல்வியை சந்தித்தது தான்.


பா.ஜனதா சார்பில் நடை பயணம் என்பது மக்களுடன் தங்கி அவர்களுடன் கிராமத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து ஒரு வருடம் அவர்களுடன் ஒன்றி இருக்கும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் எனது கை கடிகாரத்தின் பில் மட்டுமல்ல அனைத்தையும் நான் கொடுக்கிறேன். தி.மு.க முதலமைச்சர் குடும்பம், 13 அமைச்சர்களின் சொத்து பட்டியல் இதுவரை தயார் செய்துள்ளோம். ரூபாய் 2 லட்சம் கோடியை தொட்டுள்ளது. தி.மு.க வினர் தொட்டுவிட்டனர். அதற்கு முடிவுரை நாங்கள் எழுத போகிறோம். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இருக்கிறார்.


மின்சாரத் துறை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குக்கு ஆஜராகும் வக்கீலுக்கு ஒரு அமர்வுக்கான தொகை என்பது சாமானிய மனிதன் பத்து ஆண்டு சம்பாதிக்கும் பணம் ஆகும். ஒவ்வொரு தி.மு.க அமைச்சர் எம்.எல்.ஏ வுக்கு சொத்து பட்டியல் தயாரிக்க உள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண், இணையதள முகவரி வழங்க இருக்கிறோம்.


திமுகவினரின் பினாமி சொத்துக்கள் இருப்பது தெரிந்தால் அந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். விரைவில் அதற்காக தனியாக செயலியை வெளியிட உள்ளோம். ஊழலை எதிர்க்கும் ஒவ்வொரு சாமானிய மனிதனும் தகவல் தெரிவித்தால் அவர்கள் விவரம் பாதுகாக்கப்படும். தமிழகத்தின் உள்நாட்டு மதிப்பு என்பது 25 லட்சம் கோடி அதில் 10% தி.மு.க வினரிடம். இருக்கிறது. ஊழலை பொதுமக்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வெளிச்சம் போட்டு காட்ட உள்ளோம். எங்கள் கட்சியின் அணியினர் மக்களின் புகாரை ஆய்வு செய்து தெரிவிக்க உள்ளனர். இதற்காக இன்னும் ஒரு மாதத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண், செயலி ,இணையதளம் வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News