மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னர் அறிவிப்பு - யார் இந்த ஆனந்த போஸ்?
மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
By : Karthiga
மேற்கு வங்காள கவர்னராக இருந்த ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் மேற்கு வங்காளத்துக்கு புதிய கவர்னரை மத்திய அரசு நியமத்தியுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த போஸ் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'மேற்கு வங்காளத்தின் கவர்னராக இருந்த ஆனந்த போசை ஜனாதிபதி நியமனம் செய்து உள்ளார்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கேரள பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமைச் செயலாளர் , மத்திய அரசின் செயலாளர், ஐ.நா அதிகாரி என பல்வேறு பதவிகளை வகுத்துள்ளார். மத்தியிலுபம் மோடி அரசின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்த பணிக்குழுவின் தலைவராக இருந்த போது அனைவருக்கும் மலிவு விலையில் வீடு என்ற இவரது கருத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.