Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திர விவசாயி கர்நாடகாவில் அதிக விலைக்கு மிளகாயை விற்று சாதனை!

ஆந்திர விவசாயி கர்நாடகாவில் அதிக விலைக்கு மிளகாயை விற்று சாதனை!

ஆந்திர விவசாயி கர்நாடகாவில் அதிக விலைக்கு மிளகாயை விற்று சாதனை!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2020 7:00 AM GMT

கர்நாடக மாநிலம் பியடிகே என்ற இடத்தில் ஒரு குவிண்டால் சிவப்பு மிளகாயை 36,999 ரூபாய்க்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு விவசாயி விற்றுள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் அவலதத்தா கிராமத்தைச் சேர்ந்த குல்லெப்பா என்ற விவசாயி, தனது விளைபொருட்களை கிஷோர் & கம்பெனிக்கு இந்த அதிக விலையில் விற்றுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பின் படி, “எனது விளைபொருட்களை விற்க நான் பியடிகே மிளகாய் சந்தைக்கு முதல் முறையாக வந்துள்ளேன். இந்த அதிக விலையை ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு, நான் குண்டூர் சந்தையில் எனது விளைபொருட்களை விற்றேன். ஆனால் அப்போது நல்ல லாப விகிதம் கிடைக்கவில்லை. உற்பத்தி மற்றும் அறுவடைக்காக நான் குவிண்டால் ஒன்றுக்கு 10,500 ரூபாய் முதலீடு செய்தேன்,” என்றார் குல்லெப்பா.

இதே வகை ஒரு குவிண்டால் மிளகாய் கடந்த வாரம் 35,555 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 2019 இல் ஒரு குவிண்டால் 33,333 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட வகை மிளகாய்க்கு ஒரு விவசாயி வாங்கியுள்ள மிக உயர்ந்த விலை இதுவே ஆகும்.

பியடிகே மிளகாயின் சிறப்பம்சம்

பியடிகே மிளகாய் என்பது கர்நாடகாவில் அதிகமாக விற்கப்படும் மிளகாய் வகை. கர்நாடக மாநிலத்தின் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ள பியடிகே நகரத்தில் அமைந்துள்ள சந்தையால் பியடிகே மிளகாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.


டப்பி மற்றும் கட்டி என்ற இரண்டு வகைகளில் பியடிகே மிளகாய் வருகிறது. சிறிதாக குண்டாக இருக்கும் பியடிகே டப்பி, அதன் நிறம் மற்றும் சுவைக்கு மிகவும் பிரபலமானது. இது அதிக விதைகளைக் கொண்டிருந்தாலும், கட்டி வகையுடன் ஒப்பிடும்போது காரம் குறைவாக இருக்கும். மசாலா தயாரிப்பு மற்றும் ஓலியோரெசின் பிரித்தெடுத்தலுக்கு இந்த வகை மிகவும் பொருத்தமானது. பல நிறுவப்பட்ட உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு இந்த வகையை விரும்புகின்றன. ஒப்பனை தயாரிப்புகளில், முக்கியமாக நெயில் பாலிஷ் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிக்கு பாராட்டு

பியடிகே வேளாண் உற்பத்தி சந்தைக்(APMC) குழுவினர் விவசாயி குல்லெப்பாவை பாராட்டினர். பியடிகே மிளகாய் சந்தை அதிகாரி பிரபு தோத்தமணி கூறுகையில், “எங்கள் சந்தை கடந்த ஐந்து தசாப்தங்களாக விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு நல்ல தளமாக இருந்து வருகிறது. மிளகாய் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்கும்போது அவற்றை சுத்தம் செய்து உலர வைத்தால் நல்ல லாபம் ஈட்டலாம்”, என்று கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டத்தில் சுதந்திரம்

பிரதமர் மோடி அறிவித்த புதிய வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் அதிக லாபம் ஈட்டக்கூடிய விலைக்கு விற்கலாம் என்ற சுதந்திரம் கிடைத்துள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி தனது விளைபொருட்களை கர்நாடக மாநிலத்திற்கு எடுத்து சென்று அதிக விலையில் விற்றுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News