Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. அறியாமையில் உளறுகிறார் ராகுல் காந்தி: அரசியல் சட்டப்படி அளிக்க முடியாது என அரசியல் நிபுணர்கள் ஆதாரங்களுடன் கருத்து.!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. அறியாமையில் உளறுகிறார் ராகுல் காந்தி: அரசியல் சட்டப்படி அளிக்க முடியாது என அரசியல் நிபுணர்கள் ஆதாரங்களுடன் கருத்து.!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து..  அறியாமையில் உளறுகிறார் ராகுல் காந்தி: அரசியல் சட்டப்படி அளிக்க முடியாது என அரசியல் நிபுணர்கள் ஆதாரங்களுடன் கருத்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 10:42 AM GMT


ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு நேற்று சென்ற ராகுல்காந்தி அங்கு காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த பொது கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டே தீரும் என்று தெரிவித்தார்.


ராகுல் காந்தி மாநில சிறப்பு அந்தஸ்து குறித்து இவ்வாறு கூறியது சரியல்ல என்றும், அரசியலுக்காக அவர் எதை வேண்டுமானாலும் உளறி வருவதாகவும், இது ஆபத்தானது என்றும் அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது; சட்டத்தின் முன் அனைத்து மாநிலங்களும் சமமான மாநிலங்கள்தான். சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் என எந்த மாநிலமும் இல்லை.





என்றாலும் சுதந்திரம் அடைந்த பிறகு வல்லபாய் படேல் அவர்களால் இந்து மகாராஜாவின் கீழ் இருந்த காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தபோது சில நிபந்தனைகளின் அடிப்படையில் பேசி தீர்வு கண்டு காஷ்மீர் இந்தியாவுடன் பல சிரமங்களுக்கிடையே இணைக்கப்பட்டது.


காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு அன்றே பல மாநிலங்கள் அன்றைய பிரதமர் நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.


இன்றைக்கும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.


சிறப்பு அந்தஸ்தை அந்த மாநிலம் பெற்றிருந்தும் அந்த மாநிலம் திருப்தி அடையாமல் ஓயாமல் போர் கொடி தூக்கும் மாநிலமாகவே உள்ளது. எனவே அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் பலர் கோரி வருகிறார்கள்.


இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்டவேண்டும் என்றும், இதற்காக தங்கள் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து தர வேண்டும் எனவும் மத்திய அரசால் இயலாத கோரிக்கையை முன்வைத்து வேண்டுமென்றே போராட்டம் நடத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு, சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தனி அந்தஸ்து தர உறுதி அளித்ததாகவும் கூறிவருகிறார்.


ஆனால் மோடி சிறப்பு நிதி தருவதற்குத்தான் ஒப்புக் கொண்டாரே தவிர ஆந்திரத்துக்கு தனி மாநில அந்தஸ்து தருவதாகக் கூறவில்லை என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கான தனி மாநில அந்தஸ்து என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கும், பலமான மத்திய அரசுக்கும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தேசிய தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.


ஆனால் அரசியலில் முதிர்ச்சி இல்லாமல் இருக்கும் ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி மேல் ஆசை இருக்கிறதே ஒழிய அவருக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியவில்லை என கூறப்படுகிறது.


இவ்வளவு நாள் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து பற்றி பேசாத ராகுல் காந்தி, தற்போது ஆந்திர மண்ணை மிதித்ததும் தலை,கால் புரியாமல் அந்த மாநில மக்களை மகிழ்விப்பதாக நினைத்து குழந்தைபோல பேசி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நியாயமனதுதானா என்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:


எந்த ஒரு மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாது. அரசியல் சட்டத்திலும் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றால் அது மத்திய அரசின் வேலை தான்.


ஆனால் அப்படி ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் அதனால் தொடர் விளைவுகள் ஏற்படும். மேலும் பல மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கேட்டு கோரிக்கை வைக்கலாம் ஆனால். எந்த ஒரு மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்ற பிரிவு அரசியல் சாசனத்திலேயே இல்லை.


ஆனால் சில பகுதிகளை அப்படி அங்கீகரித்தால் மற்ற மாநிலங்கள் முரண்பட்டு நிற்கும். சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் என்ற பெயரில் மத்தியஅரசு கடந்த காலங்களில் நிதி உதவி அளித்துள்ளது.


முந்தைய திட்டக்கமிஷன் மற்றும்தேசிய வளர்ச்சி கவுன்சில் மூலமாக மத்திய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி, சிக்கலான சூழல், குறைந்த மக்கள் தொகை அல்லது பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி, சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதி, பொருளாதார மற்றும் கட்டமைப்பில் பின்தங்கி இருந்தல் போன்வற்றின் அடிப்படையில் சில அந்தஸ்தை தேசிய வளர்ச்சி கவுன்சில் வழங்கியது.


சிறப்பு அந்தஸ்து என்று அரசியல் சாசனத்திலேயே இல்லை.ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் எல்லா மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கேட்பார்கள்.


அப்படி சிறப்பு அந்தஸ்து அளிப்பது சாத்தியமா.. எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுத்து விட்டால், மாநிலங்களை நடத்த முடியுமா.. மத்தியஅரசு பலமுள்ளதாக இருக்கவேண்டுமா..பலவீனமானதாக இருக்க வேண்டுமா.. காங். அரசா.. பா.ஜ.அரசா.. அல்லது வேறு அரசா என்பது அல்ல பிரச்னை. நாட்டைப் பற்றித்தான் முதலில் பார்க்க வேண்டும் என்றார்.



உண்மையில் சிறப்பு மாநில அந்தஸ்து என்பது என்ன ?


ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய திட்டக்குழு, நிதி ஒதுக்குகிறது; அதில், 70 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலத்துக்கு, 90 சதவீதம் மானியமாகவும், 10 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.


சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான வழிமுறைகள், 1960களில் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள், மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினரின் எண்ணிக்கை, நிலப்பரப்பின் தன்மை உள்ளிட்டவற்றின் அடிப் படையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படலாம். மேலும், மத்திய வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், மத்திய நிதிக் குழு முன்னுரிமை அளிக்கும் எனவும் கூறப்பட்டது.



இந்த சிறப்பு அந்தஸ்துக்கு 14 வது நிதி கமிஷன் மறுப்பு:


பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை பல மாநிலங்கள், மத்தியில் ஆளும் கட்சிகளிடம், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இந்த சிறப்பு அந்தஸ்தை பெற்று வந்தன. ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்துக்கு, இந்த அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது.


ஆந்திராவுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில், இனி எந்த மாநிலத்துக்கும், சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நிதி நிலையில், மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கக் கூடாது' என, அரசியல் சட்டத்தின், 280 மற்றும், 281வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி தான், நிதி கமிஷன் துவங்கப்பட்டது. மாநிலங்களுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைத்து வருகிறது.


அதன்படி, வரி வசூல் மற்றும் வருவாயை, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலும், வளர்ச்சி, வளம் மற்றும் பிராந்திய தேவைகளை கருத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு இடையிலும் பிரிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைக்கும். இந்நிலையில், 14 வது நிதி கமிஷன், சிறப்பு மாநில அந்தஸ்து என அறிவிக்காமல், சிறப்பு நிதி ஒதுக்கலாம் என தெரிவித்துள்ளது.


இது பற்றி, நிதி கமிஷன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தான், மாநிலங்களுக்கு நிதி வழங்குவதற்கான முக்கியமான வழி; மேலும், வரியை பிரிப்பதற்கு முன், அரசுகளின் அனைத்து வருவாயையும், மொத்தமாக சேர்க்க வேண்டும்.


அதன்பின் தான், மாநிலங்களுக்கு பிரிக்கவேண்டும். இந்த நிகர வருவாயில் இருந்து, மாநில அரசுகளுக்கான பங்கை, 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்த வேண்டும்.


இதன் மூலம், ஒரு மாநிலத்துக்கு கூடுதல் சலுகை காட்டப்படுவது நிறுத்தப்படும். இதில் அரசியல் தலையீடும் இருக்காது. அதே சமயம் சில மாநிலங்களின் தேவையை கருதி, அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கலாம் எனவும் நிதி கமிஷன் தெரிவித்துள்ளது.


நிதி கமிஷன் இப்படி தெரிவித்துள்ளதால் தான், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே இனி, எந்த மாநிலமும், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், மத்திய அரசின் நிதியில் அனுபவிக்க முடியாது. இவ்வாறு, அந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஆந்திரா சிக்கலான சூழல்கள் நிறைந்த ஒரு பகுதி அல்ல. அது நன்கு வளர்ந்து வரும் மாநிலம் ஆகும். விவசாயத்திலும், மற்ற தொழில்கள் அபிவிருத்தியிலும் நிறைவான ஒரு மாநிலமாகும்.


இயற்கை வளம் மிகுந்த மாநிலம் ஆகும். மாநிலத்தை இரண்டாக பிரித்ததால் ஐதராபாத் மாநகரத்தை இழக்கலாம். இன்னொரு தலைநகரை உருவாக்க அதிக நிதி தேவை படலாம். இதற்காக சிறப்பு நிதிதான் அவர் கோர முடியும். சிறப்பு அந்தஸ்தை கோர முடியாது.


ஆந்திராவுக்கு சிறப்பு நிதியை கொடுத்துவிட்டதாக பிரதமரும் தெரிவித்துள்ளார். அதை கொண்டுதான் அமராவதி நகர் மிகவும் எழிலுடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.


ஆனால் தேர்தலை முன்வைத்து மோடி அரசுக்கு எதிராக கோஷம் போடவும், தனக்கு சவால் விடும் ஜகன் மோகனுக்கு எதிராக கோஷம் போடவும் வசதியாக தனிமாநில அந்தஸ்து கோரிக்கையை நாயுடு கையில் எடுத்துள்ளார் என்றும், இது தெரியாமல் ராகுல் காந்தி தனிமாநில அந்தஸ்து என்பது ஏதோ ஒரு சாக்லேட் விவகாரம் போல நினைத்துக் கொண்டு அவர் உளறி வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News