உயர்த்தப்பட்ட கட்டணங்கள் திரும்பபெறப்பட்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தொலைத்துவிட்டால், சேதம் அடைந்தாலோ, மாற்று சான்றிதழ் பெற கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது இனிமே பழைய கட்டணமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, 'சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும் பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்துக்கு அறிவுறுத்தப்படும்' என தெரிவித்திருந்தார்.