Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் கருப்பு நாள் என்று அண்ணாமலை விமர்சித்த தினம்!

மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாகப் பார்க்கிறேன் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கருப்பு நாள் என்று அண்ணாமலை விமர்சித்த தினம்!

KarthigaBy : Karthiga

  |  11 Sep 2022 7:00 AM GMT

இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக 18 ஆண்டுகள் விளையாடி இந்திய கூடைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற அனிதா பால் துரைக்கு சென்னை கமலாலயத்தில் வைத்து பா.ஜ.க சார்பில் கார் ஒன்றை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பரிசாக அளித்தார். அதை தொடர்ந்து சர்வதேச ஆணழகன் போட்டியில் சாம்பியனாக வெற்றி பெற்று அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டார்.மேலும் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி ஹண்டே தலைமையில் முன்னாள் மாவட்ட நீதிபதி ராஜலக்ஷ்மி ,தியாகராயர் கல்லூரி தலைவர் ராம கண்ணன், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என் முருகவேல் உட்பட மாற்று கட்சிகளைச் சேர்ந்த பலர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர் .

இந்த நிகழ்வுகளில் தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாகராஜன் வி.பி துரைசாமி ,தமிழக பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ,சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க பார்வையாளர் எம்.என்.ராஜா விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவி அகிலாண்டேஸ்வரி அண்ணாமலையை சந்தித்து வாழ்ந்து பெற்றார். அவரது மருத்துவ படிப்புக்கான செலவுகளை தமிழக பா.ஜ.க ஏற்கும் என்று அண்ணாமலை உறுதியளித்தார். அது தொடர்ந்து அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூரில் டீ கடையில் பணியாற்றி வரும் தர்மராஜ் என்பவரின் மகள் அகிலாண்டேஸ்வரி அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலமும் நீட் தேர்வு எதிர்க்காத போது தமிழகம் மற்றும் நீட் தேர்வை எதிர்க்கிறது .இது போன்று அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வித்துறை பாராட்டுவதும் இல்லை .பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய மின் கட்டணம் உயர்வை அறிவித்து இருக்கும் இன்றைய தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன். அதாவது அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருப்பதாலும் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற தைரியத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதற்கான பதிலடியை தமிழக மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வரலாறு காணாத அளவிற்கு பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News